﷽
🌧️📚 அறிவைப் பெறும் மக்களின் மூன்று வகைகள்
நபி ﷺ அவர்கள், அல்லாஹ் தமக்கு வழங்கிய ஹிதாயத் மற்றும் அறிவை மழையுடன் ஒப்பிட்டு, அறிவைப் பெறும் மக்களை மூன்று வகையான நிலங்களுடன் ஒப்பிட்டார்கள்.
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:
«مَثَلُ مَا بَعَثَنِيَ اللَّهُ بِهِ مِنَ الْهُدَى وَالْعِلْمِ كَمَثَلِ الْغَيْثِ الْكَثِيرِ أَصَابَ أَرْضًا...»
«“ அல்லாஹ் என்னை அனுப்பியுள்ள நேர்வழி மற்றும் அறிவின் உதாரணம், ஒரு பூமியை அடைந்த அதிகமான மழையைப் போன்றதாகும் ...”»
📚 ஸஹீஹுல் புகாரி & ஸஹீஹ் முஸ்லிம்
🌱 ① நல்ல வளமான நிலம்
«فَكَانَتْ مِنْهَا طَائِفَةٌ طَيِّبَةٌ قَبِلَتِ الْمَاءَ، فَأَنْبَتَتِ الْكَلَأَ وَالْعُشْبَ الْكَثِيرَ»
«“ அதில் ஒரு பகுதி நல்ல வளமான நிலமாக இருந்தது. அது நீரை ஏற்றுக்கொண்டு, அதிகமான புற்களையும் தாவரங்களையும் வளரச் செய்தது .”»
🔹 இது அறிவைக் கற்று, அதைப் புரிந்துகொண்டு, அதன்படி செயல்பட்டு, பிறருக்கும் கற்றுக் கொடுக்கும் மாணவனை குறிக்கிறது.
இவனிடம் رِوَايَة (அறிவைப் பாதுகாத்து அறிவித்தல்) மற்றும் دِرَايَة (அறிவைப் புரிந்துகொள்ளுதல்) ஆகிய இரண்டும் காணப்படும்.
---
💧 ② நீரைத் தேக்கி வைத்திருக்கும் தரிசு நிலம்
«وَكَانَتْ مِنْهَا أَجَادِبُ أَمْسَكَتِ الْمَاءَ، فَنَفَعَ اللَّهُ بِهَا النَّاسَ، فَشَرِبُوا مِنْهَا وَسَقَوْا وَزَرَعُوا»
«“ மற்றொரு பகுதி நீரைத் தேக்கி வைத்திருக்கும் நிலமாக இருந்தது. அதன் மூலம் அல்லாஹ் மக்களுக்கு பயனளித்தான். மக்கள் அதிலிருந்து குடித்தார்கள், பிறருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள், விவசாயத்திற்கும் பயன்படுத்தினார்கள் .”»
🔹 இது அறிவைக் கற்று அதை நன்றாகப் பாதுகாத்து, பிறருக்கு எடுத்துச் சொல்லும் ஒருவரை குறிக்கிறது.
அவரிடம் அறிவு பாதுகாக்கப்பட்டிருக்கிறது; அதன் மூலம் மற்றவர்கள் பயனடைகிறார்கள். ஆனால் முதல் பிரிவினரைப் போல அந்த அறிவு அவரிடத்தில் அதன் முழுமையான பலனையும் விளைவையும் உருவாக்குவதில்லை. எனவே, முதல் பிரிவினரைவிட இவர் குறைந்த தரத்தில் உள்ளவர்.
---
🏜️ ③ நீரையும் தேக்காத, பயிரையும் வளர்க்காத நிலம்
«وَأَصَابَ طَائِفَةً مِنْهَا أُخْرَى، إِنَّمَا هِيَ قِيعَانٌ لَا تُمْسِكُ مَاءً وَلَا تُنْبِتُ كَلَأً»
«“ மற்றொரு பகுதியை அது அடைந்தது. அது நீரைத் தேக்காததும், புற்களை வளர்க்காததுமான வெற்று நிலமாக இருந்தது .”»
🔹 இது அறிவைக் கேட்டு அதைப் பாதுகாக்காமலும், புரிந்துகொள்ளாமலும், அதனால் பயனடையாமலும், பிறருக்கு பயனளிக்காமலும் இருப்பவரை குறிக்கிறது.
---
🌿 இதிலிருந்து طالب العلم கற்றுக்கொள்ள வேண்டியது:
✍️ حِفْظُ الْعِلْمِ كِتَابَةً
அறிவை எழுதிப் பாதுகாத்தல்.
📖 حِفْظُ الرِّوَايَةِ
அறிவை சரியாக மனப்பாடம் செய்து, பாதுகாத்து, பிறரிடம் அறிவித்தல்.
🧠 حِفْظُ الدِّرَايَةِ
அறிவின் பொருளையும், அதிலுள்ள வழிகாட்டுதல்களையும் ஆழமாகப் புரிந்துகொள்ளுதல்.
🌧️ மழை எல்லா நிலங்களையும் அடைகிறது; ஆனால் எல்லா நிலங்களும் அதே அளவு பயனளிப்பதில்லை.
அதேபோல், அறிவு பலரையும் சென்றடையலாம்; ஆனால் அதைப் பெற்றுக் கொண்டு, புரிந்து கொண்டு, செயல்பட்டு, பிறருக்கு பயனளிப்பவரே உண்மையில் அறிவால் பயனடைந்தவர்.
🤲 اللَّهُمَّ انْفَعْنَا بِمَا عَلَّمْتَنَا، وَعَلِّمْنَا مَا يَنْفَعُنَا، وَزِدْنَا عِلْمًا
«“யா அல்லாஹ்! நீ எங்களுக்குக் கற்றுக் கொடுத்ததைக் கொண்டு எங்களைப் பயனடையச் செய்வாயாக; எங்களுக்கு பயனளிப்பதை எங்களுக்குக் கற்றுத் தருவாயாக; மேலும் எங்களுக்கு அறிவை அதிகப்படுத்துவாயாக.”»
ஷெய்க் பக்ர் அபூ ஸைத் رحمه الله அவர்களின் حلية طالب العلم (ஹில்யது தாலிபில் இல்ம்) நூலில் உள்ள விளக்கத்தின் அடிப்படையில்...
✍️ தொகுப்பு: அபூ மர்யம் அல்-ஹிந்தி
➖➖➖➖➖➖➖➖➖➖➖
◈◉❒ தார் அல்-ஹதீஸ் அஸ்-ஸலிஃபிய்யா - கோவை ❒◉◈
#typesofstudents
#hilliyathu_thalibul_ilm