TNUSRB NEW CHAIRMAN UPDATE 👇📃
ஒவ்வொரு ஆண்டும், நம் மாநிலம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்களும் இளம் பெண்களும் சீருடை அணியவும், தங்களைத் தாண்டி ஒரு உயர்ந்த நோக்கத்திற்காகச் செயல்படவும், தங்கள் சமூகங்களைப் பாதுகாக்கவும், சேவை மற்றும் பெருமைமிக்க ஒரு பணிவாழ்வை அமைத்துக்கொள்ளவும் கனவு காண்கிறார்கள். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) அந்தக் கனவை ஒரு உண்மையான மற்றும் நியாயமான வாய்ப்பாக மாற்றுகிறது.
1991-ஆம் ஆண்டு முதல், தமிழ் நாடு காவல் துறை, தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை மற்றும் சிறை & சீர்திருத்தத்துறை ஆகியவற்றில் பணியாற்ற அதிகாரிகளை இத்தேர்வு வாரியம் தேர்ந்தெடுத்து வருகிறது. இந்த பயணத்தில் நீங்கள் மேற்கொள்ளும் தொடர் உடற்பயிற்சிகள் மற்றும் கல்வி பயிலுதல் போன்ற தங்களின் உழைப்பின் அருமையை, இவ்வாரியம் நன்கு அறிந்துள்ளது. அதனால், வெளிப்படைத்தன்மை மற்றும் தகுதியின் அடிப்படையில் அமைந்த ஒரு தேர்வு முறையை இவ்வாரியம் பின்பற்றிவருகிறது. இதன் மூலம் உங்களின் கடின உழைப்பு மட்டுமே உங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதைத் தவிர வேறொன்றும் இல்லை.
இவ்வாரியத்தின் ஆட்சேர்ப்பு அறிவிப்புகள், தகுதி, தேர்வு அட்டவணைகள் மற்றும் பிற அதிகாரபூர்வ தகவல்களைத் தொடர்ந்து அறிந்துகொள்ள அனைவரும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் இணையதளத்துடன் இணைந்திருக்குமாறு ஒவ்வொரு விண்ணப்பதாரரையும் இதன் மூலம் கேட்டுக்கொள்கிறோம்.
நீங்கள் பயணிக்கும் இப்பாதையில் தமிழ் நாட்டின் இளைஞர்களாகிய உங்கள் லட்சியமும் உறுதியும் நாளைய சீருடை பணிகளின் வலிமையாகும். ஒழுக்கத்துடன் தயாராகுங்கள், நம்பிக்கையுடன் விண்ணப்பியுங்கள் உங்களுக்காக ஒரு உண்மையான சமமான வாய்ப்பு இங்கே காத்திருக்கிறது என்பதை நம்பிக்கையுடன் தெரிவித்து கொள்கிறோம்."
~ 📚📖 APJ அப்துல் கலாம் போலீஸ் அகாடமி - பெரம்பலூர் ~ 👮♀️👮♂️