Parliamentary Motions – நாடாளுமன்றத் தீர்மானங்கள் என்பதில் இவையும்… — TNPSC GROUP 1/GROUP 2 (STUDY WITH ME) — TG.ME

Parliamentary Motions – நாடாளுமன்றத் தீர்மானங்கள் என்பதில் இவையும் முக்கியம்: Adjournment Motion – ஒத்திவைப்புத் தீர்மானம் அவசரமான பொதுமுக்கியத்துவம் வாய்ந்த விஷயத்தை விவாதிக்க, வழக்கமான பணியை ஒத்திவைத்தல். Censure Motion – கண்டனத் தீர்மானம் அரசின் ஒரு குறிப்பிட்ட கொள்கை அல்லது செயல்பாட்டைக் கண்டித்தல். Confidence Motion – நம்பிக்கைத் தீர்மானம் அமைச்சரவைக்கு மக்களவையின் நம்பிக்கை உள்ளதா என்பதை நிரூபிக்கப்படும் தீர்மானம். Motion of Thanks – நன்றி தெரிவிக்கும் தீர்மானம் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம். Cut Motions – குறைப்புத் தீர்மானங்கள் Demands for Grants-ல் கோரப்படும் தொகையை குறைக்க முன்வைக்கப்படும் தீர்மானங்கள். Policy Cut – கொள்கைக் குறைப்பு Economy Cut – பொருளாதாரக் குறைப்பு Token Cut – அடையாளக் குறைப்பு Closure Motion – முடிவு தீர்மானம் விவாதத்தை முடித்து வாக்கெடுப்புக்கு கொண்டு வருதல்.

❤2
August 27, 2026 1.6K 23