✨நாள் தோறும் இஸ்லாமிய கல்வி அமர்வு | தொடர் வகுப்பு |📚 📌புத்தகம் : ஷேக் நாஸிருத்தீன் அல்-அல்பானி رحمه الله வின் ஸஹீ அத்-தர்கீப் வத் - தர்ஹீப்** صحيح الترغيب والترهيب للمحقق المحدث العلامة ناصر الدين الألباني رحمه வகுப்பு -241/தலைப்பு-14/குர்ஆன் ஓதுதல் பற்றிய நூல்/பாடம்-7/பாகம்- 1 ١٤ - كتاب الذكر ٧.( الترغيب في التسبيح والتكبير والتهليل والتحميد على اختلاف أنواعه ) 14 - புத்தகம்: திக்ர் (இறை நினைவு) - பாடம் 7 7.(தஸ்பீஹ், தக்பீர், தஹ்லீல், தஹ்மீத் ஆகியவற்றின் பல்வேறு வகைகளில் அவற்றை மேற்கொள்வதற்கான ஊக்குவிப்பு) அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்: நபி நாயகம் அவர்கள் கூறினார்கள்: "இரு சொற்றொடர்கள்—நாவுக்கு இலகுவானவை, (நன்மையின்) தராசில் கனமானவை, அர்ரஹ்மானுக்கு (அல்லாஹ்வுக்கு) மிகவும் பிரியமானவை: سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ، سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ (ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி, ஸுப்ஹானல்லாஹில் அழீம்)" — அதாவது, "அல்லாஹ்வின் துதியுடன் அவனைத் தூய்மைப்படுத்துகிறேன்; மகத்தான அல்லாஹ்வைத் தூய்மைப்படுத்துகிறேன்."(புகாரி & முஸ்லிம்)
நாள் தோறும் இஸ்லாமிய கல்வி அமர்வு | தொடர் வகுப்பு |📚 📌புத்தகம்… — Islamic Guidance Center — TG.ME
August 20, 2026 185 1