நாள் தோறும் இஸ்லாமிய கல்வி அமர்வு | தொடர் வகுப்பு |📚 📌புத்தகம்… — Islamic Guidance Center — TG.ME

✨நாள் தோறும் இஸ்லாமிய கல்வி அமர்வு | தொடர் வகுப்பு |📚 📌புத்தகம் : ஷேக் நாஸிருத்தீன் அல்-அல்பானி رحمه الله வின் ஸஹீ அத்-தர்கீப் வத் - தர்ஹீப்** صحيح الترغيب والترهيب للمحقق المحدث العلامة ناصر الدين الألباني رحمه வகுப்பு -229/தலைப்பு-13/குர்ஆன் ஓதுதல் பற்றிய நூல்/பாடம்-15/பாகம்- 1 ١٣ - كتاب قراءة القرآن ١٥ - ( الترغيب في قراءة المعوذتين) 13 - குர்ஆன் ஓதுதல் பற்றிய நூல் 15 - (அல்முஅவ்விஸதைன் [இரண்டு காப்பு அத்தியாயங்கள்] ஓதுவதில் ஊக்கம்) **உக்பா பின் ஆமிர் (ரலியல்லாஹு தஆலா அன்ஹு) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: "இன்றிரவு இறக்கப்பட்ட வசனங்களை நீர் பார்க்கவில்லையா? அவற்றைப் போன்று (வேறு எதுவும்) காணப்படவில்லை. அவை: 'குல் அஊது பிரப்பில் ஃபலக்' (திருப்பிக் கூறுக: ஃபலக்கின் இறைவனிடம் நான் காப்புக் கோருகிறேன்) மற்றும் 'குல் அஊது பிரப்பின் நாஸ்' (திருப்பிக் கூறுக: மனிதர்களின் இறைவனிடம் நான் காப்புக் கோருகிறேன்) ஆகும்." (முஸ்லிம்)" 🎓 ஆசிரியர் :அஷ்ஷெய்க் ஸலாமுல்லாஹ் உமரி நஸீரி.

August 3, 2026 138